இன்னிசை வெண்பா

வெண்பா எழுதுவ தின்நல் எளிதெனக்
கண்டீர் எனதருமை நண்பர்காள்; வென்றிட்டு
கண்கண்ட காட்சி யெலாவற்றை யும்தானே
வெண்பா எழுதும் சிறந்து

- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

வெண் - கண் - கண் - வெண் - ஒரு விகற்பம்

மேலும் சில எ-கா

உதிர எனைத்தனியே விட்டு விடுவீர். 
எதிரிக்கு நான்தனியாய்த் தானிருப்ப தில்லை. 
உதவிசெய்யத் தந்தையே என்னோ டிருப்பார், 
பதைத்தனர் சீடர் திகைத்து



உதி - எதி - உத - பதை - ஒரு விகற்பம் காண்க




துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றொட்டுப் 
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க 
அகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ் 
சகடக்கால் போல வரும். 


நாலடியார் -

பொருள்

செல்வமானது யாவரிடத்தும் நில்லாது தேர்ச்சக்கரம்போலக் கீழ்மேலாய் மேல்கீழாய் வருமாதலால் செல்வங் கிடைத்தால் பலருடன் உண்ணக்கடவாய்.

எழுதிப் பயிலுங்கள் இன்னிசை வெண்பா
எழுத எளிதாமே என்றுரைத்தேன் நானே
மொழிநம் தமிழே சிறந்தவோர் ஊற்று
பிழைக்கஞ்சின் வாரா மொழி

இது யான் எழுதிய இன்னிசை வெண்பா.

எழுதிப் பாருங்கள் இன்னிசை வெண்பா...

நன்றி

No comments:

Post a Comment