எதுகை
ஒருசொல்லில் உள்ள முதல் எழுத்தின் உச்சரிப்பு அளவும் இரண்டாவது எழுத்து அதே வர்க்கம் வருவது எதுகை.
அதாவது
என்னத்த சொல்ல; வெயில்நேரம் பார்த்திந்த
மின்வெட்டு பண்ணுற பாடு
பாருங்க
என் - மின்
எ குறில்
மி குறில்
ன் - ன் ஒரே எழுத்து...
இதில் ன் - ன் எதுகை.
அதுவே
என்னத்த சொல்ல; வெயில்நேரம் பார்த்தாயா
விண்ணிலே மின்னலை நீ?
என் - விண்
இதில் குறில் ஒத்திருந்தாலும் ன் - ண் ஒத்துப் போகாததால் எதுகை அன்று.
அதேபோல்
என்னத்த சொல்ல; வெயில்நேரம் பார்த்திந்த
தான்வெட்டு பண்ணுற பாடு
இதில் ன்-ன் வந்தாலும் குறில் - நெடிலாக முதலெழுத்து வருவதால் எதுகை ஆகாது.
சில எடுத்துக்காட்டுகள்
பனி - வினை
கல் - நெல்
கொடை - கொடு
திணை - பணி
கொல் - வெல்
மோனை
முதலெழுத்து அதே வருக்கத்தில் வருவது மோனை
கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
முதல் வரியில் உள்ள எல்லா சீர்களிலும் க வருவதை காண்க. இது மோனை.
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
இதில் தோ 4 சீர்களின் ஆரம்ப எழுத்தாக வருவதை காண்க.
அடுத்து அடி எதுகை, மோனை காணுமுன் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.
விண்ணின்று வந்தேன்நான்; விண்சொல்லை நம்பாது
மண்ணின் வயதினைக் காரணங் -கொண்டதால்
வாய்ப்பேச்சில் ஊமை யெனயிருப்பாய் வாய்சொல்லி
போய்விட்டான் தூதன் மறைந்து
மண்ணின் வயதினைக் காரணங் -கொண்டதால்
வாய்ப்பேச்சில் ஊமை யெனயிருப்பாய் வாய்சொல்லி
போய்விட்டான் தூதன் மறைந்து
No comments:
Post a Comment