கலிவெண்பா
இது இன்னிசை கலிவெண்பா
நேரிசை கலிவெண்பா
லேவியர் கலிவெண்பாவில் பலவெண்பாக்கள் நேரிசை கலிவெண்பாவாக
கண்ணி எனும் தனிச்சொல்லால் இணைத்து எழுதி வருகிறேன்.
கண்ணி என்ற தனிச்சொல் நேரிசை வெண்பாவில் வருமே தனிச்சொல், எதுகை ஒன்றி விகற்பன், அதுவே தான், ஆனால் இங்கே 12 அடிகளுக்கு மேல், ஒவ்வொரு அடிவிட்டு வரும்.
எடுத்துக்காட்டு
நாதாப் அபியு வேறு தீ எடுத்து வந்து மரித்த நிகழ்வு
புதல்வராம் ஆரோனின் நாதாப் அபியு
விதம்செய்தார் வேறே வருக்கம் -விதஞ்சேர்த்து
நாறுபுகை கொண்டுவந்தார் சந்நிதி வேறாக
ஆறாத தீயைக் கொணர்ந்ததும் -நாறுபுகை
வேறுதீயை ஏற்காதே தீவந்து சுட்டெரிக்க
வேறு கொணர்ந்த இருவரும் -பீறிப்போய்
சாக, இறைவன் பகன்ற இறைத்தூய்மை
சாகாத வண்ணம் நிலைப்பீரே -ஏக
திருநிலை எண்ணெயும் மேலிருக்க கூடம்
திருவிட்டு போகா திருமே -இருவர்
திருமக்கள் எஞ்சியோர் சொன்னான் இறைவன்
திருமுன்னே ஊழியர் சேர்த்தொன் -திருவவன்
ஆரோன் சிறுதகப்பன் பிள்ளை இருவரை
நேராண் அழைப்பித்து பீறுடல் -சீராய்
வெளிச்சென்று மண்ணில் புதைத்து விடுமே
வெளியில் புதைத்தார் அவர்
-லேவியர் நூல் கலிவெண்பா பா எண் 21, முதல் பகுதி
இதில் வரும் தனிச்சொற்களை பாருங்கள் விகற்பமாக இருப்பதைக் காணலாம். (எ.கா, இரண்டாம் அடியில் வரும் விதம்சேர்த்து என்பது முதலடி முதல் சீர் புதல்வராம் மற்றும் இரண்டாம் அடி முதல்சீர் விதம்செய்தார் இரண்டிற்கும் விகற்பம் காண்க.
புதல்வராம்
விதம்செய்தார்
விதம்சேர்த்து
இது நேரிசை கலிவெண்பா.
லேவியர் நூல் ஏறத்தாழ அனைத்தும் கலிவெண்பாவிலும் எழுதுகிறேன்.
மற்றுமோர் நேரிசை கலிவெண்பா எடுத்துக்காட்டு.
தமிழ் தன் இனமக்களுக்கு மன்றாடுவது போன்ற ஒரு கலிவெண்பா
உழவர் திருநாள் உழவனைப் போற்றா
தழுவோர் இருக்க அழுதேன் -கிழமையும்
நாட்சிறப்பும் காண்பவரே, நல்லவன் நாயகனை
காட்டில் அழவிட்டுக் கொண்டாடி -நாட்டில்
பலராகக் கூடிவீண் பேச்சாலே வாழ்த்தி
இலராம் உழவர் மறந்தீர் - மலராத
வாழ்க்கை, புரட்டிட்ட பேர்புயல், ஐயகோ
வாழ்விழந்து வீணான எம்மக்கள் -வாழ்வுயர
நீர்வருமோ, சீர்செழிக்க நானிலம் எல்லாமே?
சோர்வாக வான்பார்த்து வாடிநிற்கும் -நேர்மக்கள்
சீர்தூக்கிச் சீராக்க வந்திடுமோ சீரரசு
வேர்பற்றி நிற்க உழவர்கள் -நீர்கேள்மின்
வீணாய் உழவன் அழுதாலே வீணாகும்
வீணுலகு கேட்பீரே மக்களே -வீணாகா
காக்க முயல்வோமே ஒன்றிணைந்து, நாமெல்லாம்
காக்கின் தலையெடுப்பான் நேர்வள்ளல் -காக்காது
போனாலே வீணாகப் போவோம் விரைவிலே,
ஆனால் எமக்கென்ன ஆகட்டும் -போனாலும்
போகட்டும் என்றிருந்தால் அற்றாகி வீணாகி
தாகம் பசியென மாள்வோமே -ஆகையால்
வீண்பேச்சு, வீண்வாதம், வீண்களி, வீணாட்டம்
வீண்படுத்தும் யாதும்நீர் விட்டொழித்து -பாண்டியர்
சேரர் மறசோழர் செய்தவற்றை நாம்நினைந்து
சேரா சிறுவரையும் சேர்த்திழுச்செய் -தேரோட்டம்
போலே உழவனைக் காத்திடுவோம் வாரீரோ!
இன்றே விழித்திடுவீர் காத்திட -நன்மக்கள்
நின்றால் வளம்கொழித்து வாழ்வோம், எனவேதான்
மன்றாடு கின்றேன் தமிழ்.
மேலும் விவரம் அறிய மின்னஞ்சல்
abrahamjacobisraelgiri@gmail.com
வெண்பா இலக்கணம் மாறாது 12 அடிகளுக்கு மேல் வரும் வெண்பாக்களை கலிவெண்பா என்பர்.
ஒரே பொருளோ, கூறப்படும் செய்தியோ இருந்தால் நன்று. ஆயினும், சில நூலோர் 12 அடிக்கு மிகுந்த எந்த வெண்பாவையும் கலிவெண்பா என்றழைக்கின்றனர்.
ஓர் எடுத்துக்காட்டு
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாண் தொழாஅர் எனின்நாம்முன் கற்ற
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு பகுத்தார்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வாரே மலரோனை
வேண்டுதல் வேண்டா இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இலயே சிறந்த
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு எனவே
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வாரே பகன்றேன்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
திருக்குறளில் வரும் முதல் 7 குறட்பாக்களை சில சீர்கள் சேர்த்து இணைத்தால் மேலே கொடுக்கப்பட்ட கலிவெண்பா வந்தது. எல்லாமே இறைவன் புகழ் பாடுவதால், ஒரே பொருள் கொண்டதாகக் கொள்ளலாம்.
அடியேனின் படைப்பு
தலைவன் பணியாளன் நல்விதம் கண்டு
தலைவனின் சொத்திற்கு ஆளுமைத் தந்து;
தலைவரும் வேளையில் பொல்லா தவனாய்
தலைவர் பணியாள் அடித்து உணவுத்
தலையாள் கொடாது இருந்தவன்; நேரம்
தலைவர ஆகும் குடிவெறிக் கொள்ளத்
தலையாள் துணிந்தால், எதிர்பார்த் திராதத்
தலைவனும் வந்து தலைபணியாள் வெட்டித்
தலைவன் எறிவான் வெளிவேடக் காரன்
தலையையே தானங்; கழுகைக் கடிபற்
நிலையே இருக்குமே என்று கடைசி
நிலைகுறித்து ஓருவமை யேசு பகன்றார்
நிலையதை சீருவமை யில்
-இயேசு நாதர் வெண்பாவில் பா எண்1226 பஃறொடை வெண்பா. அதில். 12வது வரியில் கடைசி சீரும், 13வது வரியும் சேர்க்கப்பட்டுள்ளது.
இது இன்னிசை கலிவெண்பா
திருவிவிலியத்தின் மூன்றாம் நூலான லேவியர் நூல் முழுதும் கலிவெண்பாவிலும் எழுத முற்பட்டுள்ளேன். (நேரிசை மற்றும் இன்னிசை வெண்பாவில் எழுதுவது தவிர)
படிக்கச் செல்லுங்கள் இந்த இணைய முகவரிக்கு
நேரிசை கலிவெண்பா
லேவியர் கலிவெண்பாவில் பலவெண்பாக்கள் நேரிசை கலிவெண்பாவாக
கண்ணி எனும் தனிச்சொல்லால் இணைத்து எழுதி வருகிறேன்.
கண்ணி என்ற தனிச்சொல் நேரிசை வெண்பாவில் வருமே தனிச்சொல், எதுகை ஒன்றி விகற்பன், அதுவே தான், ஆனால் இங்கே 12 அடிகளுக்கு மேல், ஒவ்வொரு அடிவிட்டு வரும்.
எடுத்துக்காட்டு
நாதாப் அபியு வேறு தீ எடுத்து வந்து மரித்த நிகழ்வு
புதல்வராம் ஆரோனின் நாதாப் அபியு
விதம்செய்தார் வேறே வருக்கம் -விதஞ்சேர்த்து
நாறுபுகை கொண்டுவந்தார் சந்நிதி வேறாக
ஆறாத தீயைக் கொணர்ந்ததும் -நாறுபுகை
வேறுதீயை ஏற்காதே தீவந்து சுட்டெரிக்க
வேறு கொணர்ந்த இருவரும் -பீறிப்போய்
சாக, இறைவன் பகன்ற இறைத்தூய்மை
சாகாத வண்ணம் நிலைப்பீரே -ஏக
திருநிலை எண்ணெயும் மேலிருக்க கூடம்
திருவிட்டு போகா திருமே -இருவர்
திருமக்கள் எஞ்சியோர் சொன்னான் இறைவன்
திருமுன்னே ஊழியர் சேர்த்தொன் -திருவவன்
ஆரோன் சிறுதகப்பன் பிள்ளை இருவரை
நேராண் அழைப்பித்து பீறுடல் -சீராய்
வெளிச்சென்று மண்ணில் புதைத்து விடுமே
வெளியில் புதைத்தார் அவர்
-லேவியர் நூல் கலிவெண்பா பா எண் 21, முதல் பகுதி
இதில் வரும் தனிச்சொற்களை பாருங்கள் விகற்பமாக இருப்பதைக் காணலாம். (எ.கா, இரண்டாம் அடியில் வரும் விதம்சேர்த்து என்பது முதலடி முதல் சீர் புதல்வராம் மற்றும் இரண்டாம் அடி முதல்சீர் விதம்செய்தார் இரண்டிற்கும் விகற்பம் காண்க.
புதல்வராம்
விதம்செய்தார்
விதம்சேர்த்து
இது நேரிசை கலிவெண்பா.
லேவியர் நூல் ஏறத்தாழ அனைத்தும் கலிவெண்பாவிலும் எழுதுகிறேன்.
மற்றுமோர் நேரிசை கலிவெண்பா எடுத்துக்காட்டு.
தமிழ் தன் இனமக்களுக்கு மன்றாடுவது போன்ற ஒரு கலிவெண்பா
உழவர் திருநாள் உழவனைப் போற்றா
தழுவோர் இருக்க அழுதேன் -கிழமையும்
நாட்சிறப்பும் காண்பவரே, நல்லவன் நாயகனை
காட்டில் அழவிட்டுக் கொண்டாடி -நாட்டில்
பலராகக் கூடிவீண் பேச்சாலே வாழ்த்தி
இலராம் உழவர் மறந்தீர் - மலராத
வாழ்க்கை, புரட்டிட்ட பேர்புயல், ஐயகோ
வாழ்விழந்து வீணான எம்மக்கள் -வாழ்வுயர
நீர்வருமோ, சீர்செழிக்க நானிலம் எல்லாமே?
சோர்வாக வான்பார்த்து வாடிநிற்கும் -நேர்மக்கள்
சீர்தூக்கிச் சீராக்க வந்திடுமோ சீரரசு
வேர்பற்றி நிற்க உழவர்கள் -நீர்கேள்மின்
வீணாய் உழவன் அழுதாலே வீணாகும்
வீணுலகு கேட்பீரே மக்களே -வீணாகா
காக்க முயல்வோமே ஒன்றிணைந்து, நாமெல்லாம்
காக்கின் தலையெடுப்பான் நேர்வள்ளல் -காக்காது
போனாலே வீணாகப் போவோம் விரைவிலே,
ஆனால் எமக்கென்ன ஆகட்டும் -போனாலும்
போகட்டும் என்றிருந்தால் அற்றாகி வீணாகி
தாகம் பசியென மாள்வோமே -ஆகையால்
வீண்பேச்சு, வீண்வாதம், வீண்களி, வீணாட்டம்
வீண்படுத்தும் யாதும்நீர் விட்டொழித்து -பாண்டியர்
சேரர் மறசோழர் செய்தவற்றை நாம்நினைந்து
சேரா சிறுவரையும் சேர்த்திழுச்செய் -தேரோட்டம்
போலே உழவனைக் காத்திடுவோம் வாரீரோ!
இன்றே விழித்திடுவீர் காத்திட -நன்மக்கள்
நின்றால் வளம்கொழித்து வாழ்வோம், எனவேதான்
மன்றாடு கின்றேன் தமிழ்.
மேலும் விவரம் அறிய மின்னஞ்சல்
abrahamjacobisraelgiri@gmail.com
No comments:
Post a Comment