வெண்பா எழுதுவது எளிதானது ஐயா...

எல்லாருக்கும் வணக்கம்.

எத்தனையோ பதிவுகள் உள்ளன இணையத்தில் வெண்பா எழுத. ஏனிந்த வீண் முயற்சி? என்மனம் கேட்டாலும், மூளை இல்லை இல்லை, வெண்பா எளிதானது என்று சொல்லித் தர சிலரே உள்ளனர், இலக்கணம், அசை, சீர், யாப்பு என மிக குழப்புகிறார்கள்.

இதையும் புரிந்து ஒரு வழியாக எழுத ஆரம்பித்தால், எத்தனை தவருகள். ஹீ ஹீ ஹீ... தவறுகள்...

அதனால... எழுத ஆரம்பிச்சுட்டேன்....

வெண்பா என்பதின் பொது இலக்கணம்.

4 சீர் அடிகள்
கடைசி அடி மட்டும் 3 சீர்.
2 அடிகள் தொடங்கி 12 அடிகள் வரை இருக்கலாம்
வெண்டளை மட்டுமே பயின்று வரும்.
கடைசி சீர் நாள், மலர், காசு பிறப்பு எனும் சீர்களில் முடியும்.


ஆமா.. சீர்ன்னா என்னா?


என்னப்பா எல்லாமே சொல்லிக் கொடுக்கோனும்?




ஆமால்ல... சொல்லி தாரேன்...... மேலே உள்ள வரியில் 4 சீர்கள் உள்ளன

(யேன் இது மட்டும் இவ்ளோ பெரிசா... புரிஞ்சுக்குவீங்க பின்னாடி...)

அட 4 சொல்.. வார்த்தை தான் சீரா? இல்ல...

என்ன + அப்பா = என்னப்பா

இரு சொற்கள் ஒரு சொல்லாகியது. அதுவே சீர். இரு சொற்களுக்கு இடையில் ஒரு இடைவெளி விடுகிறோமே, அது சீர் வெளி எனலாம்.


அப்புறம்... யாப்பு...

என்னப்பு யாப்புன்னு சொல்லி பயமுறுத்த...


அய்யோ... யாப்புன்னு சொல்ல வேணாம்... 1, 2 சொல்லிறலாம்.

எழுத்துகளில் குறில், நெடில் அறிந்தீரானால் போதும்....

அ - குறில்
ஆ - நெடில்

இப்போ பாருங்க யாப்பு


என்னப்பா எல்லாமே சொல்லிக் கொடுக்கோனும்


மெய் எழுத்து... அதாவது புள்ளி வைத்த எழுத்து... இது 0. குறில் 1, எங்கேயெல்லாம் புள்ளி வைத்த எழுத்து வருகிறதோ, ஒரு கோடு பொடுவோம்

என்/னப்/பா எல்/லாமே சொல்/லிக் கொடுக்/கோனும்?

அப்புறம்... எங்கேயெல்லாம் ரெண்டு குறில் வருதோ அதை அப்படியே விட்ருவோம்.

எங்கே எல்லாம் நெடில் வருதோ அங்கே வொரு கோடு

என்/னப்/பா எல்/லா/மே சொல்/லிக் கொடுக்/கோ/னும்?

அவ்வளோ தான்... யாப்பு பிரிச்சாச்சு...


இப்போ தளை....

என்னா தலைகிலைன்னு சொல்றீர் புரியல... 



தளை... தலை இல்லே....

அதாவது ஒரு சொல்லுக்கும் வரும் இன்னொரு சொல்லுக்கும் உள்ள பந்தம். 

பிரிச்சத பாப்போம்...

என்/னப்/பா எல்/லா/மே சொல்/லிக் கொடுக்/கோ/னும்?
10/10/2 - 10/2/2 - 10/10 -110/2/10


இப்போ இந்தச் சொல் என்னப்பா எடுத்தால்.... 3 பகுதியா பிரிச்சிருக்கோம். இந்த ஒவ்வோர் பகுதியும் ஓர்அசை....

எவ்வளவு அசை இருக்கு பாருங்க...

என்/னப்/பா எல்/லா/மே சொல்/லிக் கொடுக்/கோ/னும்?
10/10/2 - 10/2/2 - 10/10 -110/2/10
3              3            2         3


வெண்பாவில் 2 அல்லது 3 அசை சீர்கள் தான் வரும். 1 அசை சீர் கடைசி சீர் மட்டும் வரலாம். அதாவது முன்னமே பார்த்தோமே... கடைசி அடி 3 சீர்கள் கொண்டிருக்கும். அந்த கடைசி அடியில் கடிசி சீர் 1 அசை சீராக வரலாம்.

3 அசைக்கு மேல் உள்ள சொற்கள் வெண்பாவில் வராது

எ.கா: இப்போதெல்லாம்

பிரித்தால்
இப்/போ/தெல்/லாம்

4 அசைகள் வருவதை காண்பீர்கள். இந்த சீர் வெண்பாவில் வராது
இப்போ தளை...

3 அசை சீர் 110 வில் முடியாது

3 அசை சீர் இருந்தால் பின்வரும் சொல்லில் 11 அல்லது 110 வராது

3 அசை சீர் இருந்தால் பின் வரும் சொல்லில் 10 அல்லது 20 அல்லது 2 மட்டுமே தொடங்கும்

2 அசை சீர் இருந்தால் பின்வரும் சொல்லில் அதே அசையில் தொடங்காது

2அசை சீர் முடிவு 10 என்றால் பின்னால் 20 மற்றும் 10 வராது.

2 அசைசீர் முடிவு 20 என்றால் 20 பின்னால் 10 மற்றும் 20 வராது

2அசை சீர் முடிவு 110 என்றால் பின்னர் 120 அல்லது 110 வராது

2அசை சீர் முடிவு 120 என்றால் பின்னர் 120 அல்லது 110 வராது


அதாவது 

என்/னப்/பா கொடுக்/கோ/னும் சொல்/லி எல்/லா/மே

10/10/10 - 110/2/10 -10/1 - 10/2/2


இதில் என்னப்பா சொல் 3 அசை- கொடுக்கோனும் தொடக்கம் 110. இது வராது.

சொல்லி - எல்லாமே
10/1 - 10/2/2

சொல்லி முடிவு 1 - இதன் பின்சொல்லில் 10 வராது... (0 கூட்டினா ஒன்னும் வராதே)

கொடுக்கோனும் - சொல்லி
110/2/10 -10/1

இது வரலாம்... கொடுக்கோனும் - 3 அசை சீர். அதனால் வரலாம்.

இப்போ ஒரு நாம் மிக அதிகமாக வாசித்த ஒரு பாடலை யாப்பு பிரித்து பாக்கலாம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே வுலகு


திருக்குறள் - குறள் வெண்பா வடிவில் அதாவது 2 அடியில் எழுதப்பட்டதால் திருக்குறள் என்று பெயர் பெற்றது.


அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி பக/வன் முதற்/றே வுல/கு
11/1       -11/1 -       110/10/10-                 2/1      11/10         110/2            11/1


இப்போ தளை வருதா பாருங்க...

3 அசை சீர் 110 வில் முடியாது

3 அசை சீர் இருந்தால் பின்வரும் சொல்லில் 11 அல்லது 110 வராது

3 அசை சீர் இருந்தால் பின் வரும் சொல்லில் 10 அல்லது 20 அல்லது 2 மட்டுமே தொடங்கும்

2 அசை சீர் இருந்தால் பின்வரும் சொல்லில் அதே அசையில் தொடங்காது


நாமும் வெண்பா எழுதலாம்....


வெண்பா எழுதலாம் வாங்கப்பு; சீர்தளை
இவ்விரண் டோடு குறில்நெடில் மட்டும்
தெரிந்தால் எழுதலாம் வெண்பாவை நாமும்
அறிந்தே எழுதிடு வோம்

பிரிச்சு பாருங்க... வெண்பா இலக்கணம் 

2 அடி முதல் 12 அடி - ஓகே
யாப்பு பிரிச்சா

வெண் பா எழு தலாம்  வாங் கப் பு  சீர் தளை
10/2                 11/120             10/10/1             20/12
இவ் விரண்  டோ டு குறில் நெடில் மட் டும்
10/110                2/1                110/110                   10/10
தெரிந் தால் எழு தலாம்  வெண் பா வை    நா மும்
110/10                     11/120                10/2/2                     2/10
அறிந் து எழு திடு வோம்
110/1             11/11                  20


தளை சரியா இருக்கா?

இந்த தளை தான் வெண்டளை.


என்னை சொல்லோனும் அடித்து..... 

மேலே... உள்ள சில வரிகளை இணைத்தால்


என்னப்பா எல்லாமே சொல்லிக் கொடுக்கோனும்?
என்னப்பு யாப்புன்னு சொல்லி பயமுறுத்த
என்னா தலைகிலைன்னு சொல்றீர் புரியல
என்னைச்சொல் லோனும் அடித்து

இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா....

அது என்னா விகற்பம்? இன்னிசை?...

சரி...

அடிகளில் முத சீர் முதல் அசை பாருங்க

என், என், என், என்....

அழகா இருக்குல்லா... அது தேன் விகற்பம்.

இப்போ 

என், என், தன், என்

இதுல பாருங்க... இரண்டாவது எழுத்து மட்டும் ஒன்னா வருது... இதுவும் விகற்பம்


என், தன், தண், கொண்

இதுல முதல் இரண்டு ஒரு விகற்பம், மற்ற இரண்டு மற்றொரு விகற்பம்.



இப்போ அடியேன் எழுதிய ஒரு வெண்பா பாக்கலாமா....

4 அடி வெண்பா....

அன்பாகி யாதியில் வாக்காகி யிவ்வுலகும்
அன்பரா லாகி; யொளியுமாய் அன்பரே
வாழ்வாக்காய்த் தானிருந்துத் தானே திருமெய்யாய்
வாழ்ந்தா ருலகில் இயேசு

இதில்... அன், அன் ஒரு விகற்பம், வாழ் - வாழ் - மற்றொரு விகற்பம்.


இதிலே இரண்டாவது அடியில் கடைசி சீர் முன்னாடி ஒரு "-" சேத்தோம்னா...


அன்பாகி யாதியில் வாக்காகி யிவ்வுலகும்
அன்பரா லாகி; யொளியுமாய் -அன்பரே
வாழ்வாக்காய்த் தானிருந்துத் தானே திருமெய்யாய்
வாழ்ந்தா ருலகில் இயேசு

இப்போ இது இரு விகற்ப நேரிசை வெண்பா....


இல்ல இல்ல... இரு விகற்ப ஆசிடை நேரிசை வெண்பா...

இந்த நேரிசை வெண்பா இலக்கணத்தில் வராத எந்த 4 அடி வெண்பாவும் இன்னிசை வெண்பா எனப்படும். 

அப்போ... இன்னிசை வெண்பா எதுன்னு தெரியனும்னா நேரிசை வெண்பா எதுன்னு தெரியனும்.

இரண்டு குறள் எடுத்துக்குவோம்...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

இந்த குறட்பாக்களின் நடுவே ஒரு சீர் அதாவது முதல் குறட்பாவின் 2வது அடியில் 4வது சீர் போட்டு அது முதலடி முதல் சீருக்கும், இரண்டாமடி இரண்டாம் சீருக்கும் விகற்பத்தில் ஒத்து இருந்தால் - இருவிகற்ப நேரிசை வெண்பா ஆகிவிடும்.

எ.கா.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு -இகத்திலோ
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 

இகத்திலோ என்ற சொல்

அக, பக, இக என்று அழகான விகற்பம்.

இப்போ அப்படியே உல்டா பண்ணி பாப்போம்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். -கற்ற
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


இதில் பாருங்கள் இரண்டாம் அடி 3வது சீர் ஓர் அசை சீர்... ஓர் அசை சீர் வெண்பாவின் நடுவே வாரா.

அதனால் எனின் பின்னாடி ஒன்றோ ரெண்டோ அசை வைத்து

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்நாம்முன் -கற்ற
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

இந்த நாம்முன்.... ஈரசை சீர் சேர்த்தோமே... இதன் பேர் ஆசு... பற்றாசு... பொற்கொல்லர் நகை செய்ய பயன்படுத்தும் பொருள். அதனால் இது இருவிகற்ப ஆசிடை நேரிசை வெண்பா.

இப்போ என்னோட இன்னொரு வெண்பா பாக்கலாமா.... 



உண்டான திங்கனைத்தும் வாக்கவரால் உண்டாகி;
உண்டான யாதும் அவராலே அன்றியே
உண்டாக வில்லை அவரிலே நல்வாழ்வு
உண்டாமே அவ்வாழ் வொளி
இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா....

-இயேசு வெண்பா

ஏன்னா.... இரண்டு குறள்களாக பிரிக்க முடிந்தாலும், பாவில் எட்டாவது சீர், முதற்சீர்  ஐந்தாவது சீரகளுடன் விகற்பம் இல்லாது இருப்பதால் இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா.

இப்போ அதையே கொஞ்சம் மாத்தி எழுதினா...

உண்டான திங்கனைத்தும் வாக்கவரால் உண்டாகி;
உண்டான யாதும் அவராலே -கொண்டன்றி
உண்டாக வில்லை அவரிலே நல்வாழ்வு
உண்டாமே அவ்வாழ் வொளி

இப்போ பாருங்க.... ஒரு விகற்ப ஆசிடை நேரிசை வெண்பா.

அதே போல்

வெண்டளை மட்டுமே எழுதி வெண்பா எனக் கூறவும் முடியாது.

எ.கா

தன்னானே தானனன்னே தன்னானே தானனன்னே
தன்னானே தானனன்னே தன்னானே தானனன்னே
தன்னானே தானனன்னே தன்னானே தானனன்னே
தன்னானே தானனன்னே தன்னானே தானனன்னே
தன்னானே தானனன்னே தான்

இதை யாப்பு பிரித்து பார்த்தால் வெண்டளை மட்டும் வந்து
வெண்பா இலக்கணம் அழகாகப் பொருந்தும். ஆனால், பொருளே இல்லாத நாட்டுப்புற மெட்டு, எப்படி வெண்பாவாகும்.

இதே வெண்பாவை, கொஞ்சம் மாற்றி

தன்னானே பாட்டிசைத்து தானனன்னே பாடினேன்
தன்னானே மெட்டிலே தானாக ஆடினேன்
தன்னானே தெண்ணையிலே தான்வீசிக் காற்றதும்
தன்னானே பாடுதே பாட்டு

இதில் கண்டீர்கள் என்றால் பொருள் உள்ளது.

பயிற்சியாக, சில குறள்களை எழுதிப் பார்க்கலாம்

முடிந்தால், சில நிகழ்வுகளை எழுதலாம்.

உங்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன...

அப்பாடி.... முடிஞ்சதுடா அறுவைன்னு நெனச்சா.... விட்டுடுங்க.... மேலே படிக்காதீங்க.....

3 comments:

  1. புரிந்தமாதிரி இருக்கு எனக்கு
    புரியாத மாதிரியும் இருக்கு
    மெட்டு ஒன்னு இருந்து சொன்னா
    மெட்டுக்கு பாட் டெழுதி வெண்பானு
    செல்லீருவே....

    ReplyDelete
  2. அற குறையா போ ரேனே
    மனசு
    அறச் செய்ய விரும்பு தையா
    ஆற்றாமை யில் போ ரோனே
    மனசு
    ஆத்துலதா தேடுதையா வெண்பா வ

    ReplyDelete
  3. நன்றி அய்யா

    ReplyDelete